{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7mbsgs5h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mbsgs5h/", "kind": "word", "headword": "சடுதி மாற்றம்", "romanization": "caṭuti māṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:50.376665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது கால்வழிப் பண்புடயது. இதனால் திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாதல். காட்டாக, இயல்பான புகையிலைச் செடியில் 20 இலைகளும் மாற்றம் பெற்ற செடியில் 70 இலைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டிரோசோ பைலா என்னும் கனி ஈயில் மட்டும் 1000 மாற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இம்மாற் றம் நான்கு வகைப்படும். 1.நிறப்புரி மாற்றம் 2.மரபணு மாற்றம் 3.தான் தோன்று மாற்றம் 4.தூண்டு மாற்றம்", "needs_definition": false, "gloss_en": "mutation", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 281"}]}}