{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7fx4j8u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7fx4j8u9/", "kind": "word", "headword": "ஒரு முடிவன்", "romanization": "oru muṭivaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.154589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் எண்ணை பதிவகங்களில் (registers) பதிவுசெய்து வைக்கும் முறை. இம்முறையில் ஒர் எண்ணின் பெருமதிப்புள்ள பைட் (most significant byte), முதலில் இடம் பெறும். (எ-டு) A02B என்ற் பதின் அறும (Hexadecimal) எண் A02B என்று பதியப்படும். சிறு முடிவன் முறையில் 28A0. பெரு முடிவன் முறை மோட்டோரோலா நுண் செயலிகளில் பின்பற்றப்படு கிறது. இன்டெல் நுண்செயலிகள் சிறுமுனைய முறையைப் பயன் படுத்துகின்றன. பெரு முடிவன் என்ற சொல் ஜோனாதன் ஸ்விஃப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் பெரு முடிவன் என்ற சொல், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கிறது. அக்குழுவினர், முட்டையை உண்ணும்போது அதனைச் சிறுமுனைப் பக்கம் உடைக்க வேண்டும் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.", "needs_definition": false, "gloss_en": "Big endian", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பெரு முனையன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 148"}]}}