{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6yvdhskh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6yvdhskh/", "kind": "word", "headword": "ஏற்புச் சுற்றுவழி", "romanization": "ēṟpuc cuṟṟuvaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.712526+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் சுற்றுவழியில் (குறிப்பாக வானொலியில்) ஒரு கொண்மியும், ஒரு மின்கம்பிச் சுருளும் இருக்கும். இந்த மின் சுற்றுவழியில் மின்விசை பாயத் தொடங்கியதும், அது மின்சுற்று வழியைச் சுற்றி முன்னும் பின்னுமாகப் பாயும். கொண்மி, கம்பிச் சுருள் இரண்டின்வடிவளவுகளைப் பொறுத்து, இந்த ஊசலாட்டத்தின் அலைவெண் அமையும்.இது சுற்றுவழியின் அலைவெண்ணை இயல்பான அளவுக்கு வைத்திருக் கும். ஆதார அலைவெண் சுற்று வழியின் இயல்பான அலைவெண்களுக்குச் சமமாக இருப்பின் பெருமளவு மின்னோட்டம் பாய்கிறது. அந்தக் குறிப்பிட்ட அலைவெண்களுக்கு அந்தச் சுற்றுவழி ஏற்புச் சுற்றுவழியாக அமைகிறது. நாம் வானொலியைத் திருப்பும்போது: அதனை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அலைவெண்ணுக்குரிய ஏற் புச் சுற்று வழியாக மாற்றுகிறோம்.", "needs_definition": false, "gloss_en": "acceptor circuit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 13"}]}}