{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6fsr3nzg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6fsr3nzg/", "kind": "word", "headword": "வஜ்ஜிரவேல் முதலியார்", "romanization": "vajjiravēl mutaliyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.426959+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சைவ சமயத்தவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். கணித ஆசிரியராகக் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிபவர். இவர் இத்துடன் சைவ சித்தாந்த நூற்களை நன்கு பயின்று நல்ல புலமை பெற்று அதன் சார்பில் பல அரிய சொற்பொழிவுகளை அருந்தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்து வருபவர். திருவள்ளுவரைப் பற்றிய ஒரு நூல் இவரால் எழுதப்பட்டுத் திருவள்ளுவர் சிறந்த சைவசித்தாந்தியாவார் என்பதை நிலைநாட்டியுள்ளார். சைவ சம்பந்தமான கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளவர். வட மொழியும் அறிந்தவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 649"}]}}