{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6f4k53sa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6f4k53sa/", "kind": "article", "headword": "ஆசியாகோ", "romanization": "āciyākō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.547050+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம்.", "body_ta": "ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம். கடல் மட்டத்திற்கு 3.278 அடி மேலேயுள்ளது. முதல் உலக யுத்தத்தில் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடந்த போர்களில் ஆசியாகோவில் நடந்த சண்டை முக்கியமானது. போர் நினைவுச் சின்னம் ஒன்று பெரிதாக இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. மக்: 3,051 (1936)."}}