{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "67gn7kdc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67gn7kdc/", "kind": "article", "headword": "சுழி", "romanization": "cuḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.653840+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மிகை, குறை அல்லது நேர்ம, எதிர்ம (positive,negative) எண்களை வரிசைப்படி எழுதும் போது, இரண்டிற்கும் இடையே வரும் எண் சுழி எனப்படும்.", "body_ta": "மிகை, குறை அல்லது நேர்ம, எதிர்ம (positive,negative) எண்களை வரிசைப்படி எழுதும் போது, இரண்டிற்கும் இடையே வரும் எண் சுழி எனப்படும். இது ‘0’ எனக் குறிக்கப்படும். …-3, -2, -1, 0,1,2,3,… வரிசையின் நடுவில் உள்ள ‘0’ குறி சுழியைக் குறிக்கிறது. சுழிக்கு எண் மதிப்பு இல்லையென்றாலும், கணிதத்தில் முக்கிய பங்கைப் பெறுகிறது. பூஜ்யம், சுன்னம், சூனியம், இன்மை என்னும் சொற்கள் அனைத்தும் சுழியையே குறிக்கும்.\n\nகூட்டலிலும், கழித்தலிலும், சுழிக்கு மதிப்பில்லை. x + 0 = x; -x -0 = -x ஆகின்றன. ஆனால், பெருக்கலில் சுழி வரின், பெருக்குத் தொகை சுழியாகிறது. x X 0 = 0. வகுத்தலில் தொகுதியில் (numerator) சுழி இருந்தால், ஈவு சுழியாகும். {[sfrac|0|x = 0; பகுதி சுழியாக இருந்தால், ஈவு கந்தழியாகும் (infinity) \\frac {x}{0} = \\infty; ஓர் எண்ணின் அடுக்கு (power) 0 ஆனால், அவ்வெண்ணின் மதிப்பு 1 ஆகும். இதே போல, 0! இன் மதிப்பும் 1 ஆகும்.\n\n1,2,3,4,5,6,7,8,9, என்னும் ஒன்பது குறிகளையும், ‘0’வையும் கொண்டு, எந்த எண்ணையும் எழுதலாம். காட்டாக, 1050 என்னும் எண்ணின் முதல் இலக்கத்திலும், நூறாம் இலக்கத்திலும் ‘0’ உள்ளது. ஆதி காலத்தில், இந்த எண்ணை 1-5- என்றோ, 1.5. என்றோ குறித்தனர். ஆனால், ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதுகையில் - என்ற கோட்டையே என்ற புள்ளியையோ எழுதுவது கடினம். கோட்டு வழியாக ஏடு கிழிந்து விடவும், புள்ளி வைக்கும் போது, ஏட்டில் துளை ஏற்படவும் வாய்ப்புள்ளமையால், இதைக் தவிர்க்க முன்னோர்கள் சுழியைச் சிறிய வட்ட வடிவில் ‘0’ என்று எழுதினர். இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இக்குறி அரபு நாடுகள் வழியாக, மத்திய ஐரோப்பாவிற்குப் பரவிற்று. அரேபியர்களால் வழங்கப்பட்ட இக்குறியை ஐரோப்பியர், அரபு முறைக் குறி என்றனர். அரேபியர் சிபிர் என்றும், ஐரோப்பியர் சைஃபர் (cipher) என்றும், சீரோ (zero) என்றும் சுழியைக் குறிப்பிட்டனர்.\n\nஒரு வெற்றுக் கணத்தின் (empty set) முதலெண் (cardinal number) சுழியாகும். சுழி நீளமுள்ள வெக்டர் சுழி வெக்டர் (zero vector) எனப்படும். V = ai + bj + ck என்னும் வெக்டர் வகையில் 0 = 0i + 0j + 0k என்பது சுழி வெக்டரைக் குறிக்கும். —பங்கஜம் கணேசன்"}}