{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5pq4dsmr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5pq4dsmr/", "kind": "article", "headword": "அகில இந்தியக் கீழ்நாட்டுக்கலை மாநாடு", "romanization": "akila intiyak kīḻnāṭṭukkalai mānāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.444333+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(All India Oriental Conference) : கீழ்நாட்டு ஆராய்ச்சியாளாின் பணியை ஒன்றுசேர்த்து இணைக்கவும், அவர்களுக்கு வேறு வகைகளில் உதவவும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் பல பகுதிகளில் கூட்டப்பெறும் மாநாடு.", "body_ta": "(All India Oriental Conference) : கீழ்நாட்டு ஆராய்ச்சியாளாின் பணியை ஒன்றுசேர்த்து இணைக்கவும், அவர்களுக்கு வேறு வகைகளில் உதவவும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் பல பகுதிகளில் கூட்டப்பெறும் மாநாடு. இதன் மத்திய அலுவலகம் புனாவிலுள்ள பாண்டாரகர் கீழ்நாட்டு ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ளது. இது 1919-ல் பூனாவில் கட்டப்பட்டது. இம்மாநாட்டில் ஆராய்ச்சியாளர் தாம் செய்த ஆராய்ச்சிகளை விவரிக்கிறார்கள். கீழ்நாட்டுக் கலைையப்பற்றிய ஆராய்ச்சிகள் வேறு ஸ்தாபனங்களின் ஆதரவில் நடைபெற்றாலும் இம்மாநாடு அதற்குத் தனது உதவியை அளிக்கிறது. இதிலுள்ள பல பிாிவுகளில் தென்னிந்தியப் பண்பாட்டிற்கும் ஒரு பிாிவுஉண்டு."}}