{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4snzhgrm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4snzhgrm/", "kind": "article", "headword": "அகோபிலம்", "romanization": "akōpilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.513961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர்.", "body_ta": "கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர். மாவட்டத்தின் பெரிய விஷ்ணு கோயில் இங்குள்ளது. மலை உச்சியிலும் சரிவிலும் அடியிலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. அடியிலுள்ள கோயிற் சுவரில் தீட்டப்பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் மிகச் சிறந்தவை. மண்டபத்தின் தூண்கள் 8 அடி சுற்றளவு உடையன. கோயிலைச் சேர்ந்த அகோபில மடம், ஆதிவளர் சடகோப சுவாமிகளால் அகோபிலம் என்னும் ஊரில் நிறுவப்பெற்றது. இது அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கும். இதன் கிளைகன் ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளூர் முதலிய ஊர்களிலும் இருக்கின்றன."}}