{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4n7w5kfc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4n7w5kfc/", "kind": "article", "headword": "ஆக்லஹாமா", "romanization": "āklahāmā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.216196+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்லஹாமா அமெரிக்க ஐக்கிய நாட்டு இராச்சியங்களில் ஒன்று.", "body_ta": "ஆக்லஹாமா அமெரிக்க ஐக்கிய நாட்டு இராச்சியங்களில் ஒன்று. அது சிவப்பு மனிதர் நிலம் என்று பொருள்படும். அங்குள்ள நதிகள் ஆர்க்கன்சாஸ், சிவப்பு நதி ஆவன். வெள்ளையர்க்கும் நீக்ரோக்களுக்கும் தனித்தனிப் பாடசாலைகள் உள. செம்பு, இரும்பு, ஈயம், ஆஸ்பால்ட், கண்ணாடி, எண்ணெய், நிலக்கரி முதலிய பொருள்கள் கிடைக்கின்றன. மண்ணெண்ணெய் சுத்தம் செய்தல், மாவு அரைத்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. பரப்பு : 69.283 ச.மைல். மக் : 22,33,351 (1950)\n\nதலைநகரம் ஆக்லஹாமா. இங்கு முக்கியமான அமெரிக்க மண்ணெண்ணெய்க் கிணறுகளுள் ஒன்று உளது. இராச்சியத்தில் உண்டாகும் பொருள்கள் இங்கிருந்தே பல ஊர்களுக்கும் செல்லுகின்றன. மக்: 2.43.504 (1950)"}}