{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4guk2wk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4guk2wk8/", "kind": "word", "headword": "கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப்புள்ளிகள்", "romanization": "kārṭṭīciyaṉ āyattolaivuppuḷḷikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:58.849626+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடைமட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காணலாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x, y ஆகிய இரு அச்சுகளின் ஆயத்தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத் தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணித முறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.", "needs_definition": false, "gloss_en": "cartesian coordinates", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 218"}]}}