{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4cue46zr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4cue46zr/", "kind": "article", "headword": "உடல்", "romanization": "uṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.640666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "‘உடல்’ என்ற பெயர் விளக்கத்துடன் ஒரு தோற்கருவி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.", "body_ta": "‘உடல்’ என்ற பெயர் விளக்கத்துடன் ஒரு தோற்கருவி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n\nஇது கோயிலுக்குள்ளேயே வாசிக்கப்படும் ஒரு வகை வாத்தியம். அமைப்பில் தவிலைப் போலவே இருக்கும். இதன் ஒலி ஓங்காரத் தொனியை ஒத்திருக்கும். இதைப் பூசாகாலங்களில் மட்டுமே அடிப்பார்கள். புதுவைக்காளத்தீசுவரன் கோயிலில் ‘உடல்’ ஒன்று ஒரு மூலையில் தொங்க விடப்பட்டிருக்கிறது. இப்போது எவரும் அடிப்பதாகத் தெரியவில்லை."}}