{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "45f58t3h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/45f58t3h/", "kind": "word", "headword": "மொழி விவர அறிவிப்பு", "romanization": "moḻi vivara aṟivippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.812890+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும் சொற்றொடர். அது, செய்ய வேண்டிய ஒரு இயக்கத்தைக் குறிப்பிடலாம் அல்லது செயலாக்க நிரலாக்கத் தொடருக்கு அனுப்பவேண்டிய தரவுகளை மட்டுமே கொண்டதாக இருக்கலாம். language subset : மொழி துணைத் தொகுதி : ஒரு மொழியின் மற்ற பகுதியைச் சாராமல் சுயேச்சையாக இயங்கக்கூடிய, ஒரு மொழியின் பகுதி. language translation : மொழி பெயர்ப்பு : பேசிக்கிலிருந்து ஃபோர்ட்ரானுக்கோ அல்லது ஃபோர்ட்ரானிலிருந்து பாஸ்கலுக்கோ மொழி பெயர்ப்பு செய்வது போன்று ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத் தரவுவை மாற்றும் செயல். language translator programme : மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர் : பொருளை மாற்றாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு சொற்றொடர்களை மாற்றும் நிரலாக்கத் தொடர். LAN manager : லேடன் மேலாளர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'லேன் இயக்க அமைப்பு. ஒரு பணியகத்தின் கீழ் ஒ/எஸ்2இல் பயன்பாடாக இயங்கி டாஸ் ஒ/எஸ்2 மற்றும் யூனிக்ஸ் வேலை நிலையங்ளுக்கு உதவுகிறது. கோப்பு பங்கிடுவதில் நுண் மென்கோப்புப் பங்கீட்டு வரை முறையை மைக்ரோசாஃப்ட் ஃபைல் ஷேரிங் புரோட்டோகால் பயன்படுத்துகிறது. போக்குவரத்து நுட்பத்திற்கு நெட் பயாஸ் (NET BIOS) வரை முறையைப் பயன்படுத்துவது டன் செயலாக்கத்திற்கிடையிலான தரவு தொடர்புக்கு பெயரிடப்பட்ட குழாய்களைப் பயன்படுத்துகிறது. LAN network manager : லேன் பிணைய மேலாளர் : பிணையத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த பிணைய நிர்வாகிக்குப் பயன்படும் ஐபிஎம் மின் அடையாள பிணைய நிர்வாகம். லேன் பிணைய மேலாளருக்குத் தேவையான தரவுகளைத் திரட்டித் தருகின்ற, பணி நிலைய சகாவாக லேன் நிலைய மேலாளரைக் கூறலாம். LAN requester : லேன் வேண்டுபவர் : வேலை நிலையத்திலேயே தங்கி இருக்கின்ற லேன் பணியக மென்பொருள். lansel mail bag : கையளவு மின் அஞ்சல் கருவி. LANserver : லேன்பணியகம் : லேன் மேலாளரின் ஐபிஎம் பதிப்பு. குறுபரப்பு இணையக் கட்டமைப்பில் (லேன்) பணியகம். LANtastic : லேண்டாஸ்டிக் : எளிதாக பயன்படுத்தக்கூடிய ஆர்ட்டி சாஃப்டின் பீ. சி. க்களுக் கான புகழ்பெற்ற நேருக்கு நேர் லேன் இயக்க அமைப்பு. ஈத்தர் நெட், ஆர்க்நெட் மற்றும் டோக்கன் ரிங் ஏற்பிகளையும் அதனுடைய முறுக்கிய இணை ஏற்பிகளையும் ஒரு நொடிக்கு இரண்டு மெகாபிட் அளவில் இது ஆதரிக்கிறது. மின் அஞ்சல் (இ-மெயில்) மற்றும் சாட் பணிகளும் இதில் உள்ளடக்கி மீமிகுதுண்மிகள் உள்ளது. குரல் அஞ்சல் மற்றும் உரையாடல் வசதியும்கூடுதலாகக் கிடைக்கும். LAP : லேப் : Line Access Protocol என்பதன் குறும்பெயர். இரண்டாம் நிலை (தரவு இணைப்பு நிலை) வரைமுறை. Lap Computer : மடிக் கணினி : எடுத்துச் செல்லக்கூடிய பெட்டி யளவு அல்லது நோட்டுப்புத்தக அளவு கணினி. பொதுவாக சுமார் 5 கிலோவுக்குக் குறைவான எடை உள்ளதாக இருக்கும். laplink : லேப்லிங்க் : டிராவலிங் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பீ. சி. கோப்பு மாற்றல் நிரலாக்கத் தொடர். லேப்டாப் மற்றும் டி. டீ. பீ. கணினிகளுக் கிடையில் தரவுகளை இது மாற்றுகிறது. லேப்லிங்க் மேக், பீ. சி. க்கும் மேக்குக்கும் இடை யில் கோப்புகளை மாற்றுகிறது. laptop : மடிக் கணினி . தட்டையான திரையுள்ள, எடுத்துச் செல்லக்கூடிய கணினி. பொதுவாக ஒரு டஜன் பவுண்டுக்குக் குறைவான எடை உடையது. ஏசி மின்சக்தி/பேட்டரியைப் பயன்படுத்துகிறது. வெளிப்புற திரையகத்து இணைப்புகளால் இணைக்கப்பட்டு டி. டீ. பீ. கணினியாகவும் செயல்படவல்லது. வெளிப்புற சி. ஆர். டி. மற்றும் முழு அளவு விசைப்பலகையுடன் இணைக்கலாம். மவுஸ் போர்ட், டிராக்பால் ஆகியவை உள்ளே அமைக்கப்பட்டிருக்கும். நின்றபிறகு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கக் கூடியது. வி. ஜி. ஏ. கிரே அளவும், வண்ணமும் உடையது. பேட்டரியில் இயங்கக்கூடிய 386 எஸ் அல்லது ஏஎம் 386 எக்ஸ் எல் ஆகிய மையச் செயலகங்களைக் கொண்டிருக்கும். large icons : பெரிய சின்னங்கள். large main memories : பெரிய முதன்மை நினைவகம்; பெரிய முதன்மை நினைவு பதிப்பான்கள் large model : பெரிய மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் ஆணைகள் மற்றும் தரவுகள் இரண்டுமே 64 கிலோ பைட்டுகளைவிட அதிக மாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்த்து 1 மெகா பைட்டுகளைவிடக் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தரவு கட்டமைப்பும் 64 கிலோ பைட்டுகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும். Large-Scale Integration (LSI) : பேரளவு ஒருங்கிணைப்பு : (எல்எஸ்ஐ) : ஒரு சிலிக்கான் சிப்புவில் அதிக எண்ணிக் கையில் (பொதுவாக நூறுக்கு மேல்) ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களை வைக்கும் செயல் முறை. LASER லேசர் (சீரொளி; ஒளி ஒழுங்கமைவு) : Light Amplification by simulated Emission of Radiation என்பதன் குறும்பெயரே'லேசர். மின்காந்த அலைகளை கதிர்வீச்சு வெளியிடுவது போன்ற செயல் மூலம் பெரிதாக்கும் கொள்கையைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம். அகச்சிவப்பு புலனாகும் அல்லது அல்ட்ரா வய்லட் பகுதியில் இயங்குகிறது. laser disk : ஒளிவட்டு; லேசர் வட்டு. laser disk memory : லேசர் வட்டு நினைவகம் : 12 அங்குல (291 மி. மீ) பிளாஸ்டிக் வட்டில் லேசரால் தரவு பதியப்பட்டு, படிக்கப்படக் கூடிய வடிவில் உள்ள சேமிப்பக சாதனம். அண்மையில் உருவாக்கப்பட்டது. laser font : லேசர் எழுத்துரு laser jet : லேசர் ஜெட் : எச். பி. நிறுவனத்தின் டெஸ்க் டாப் லேசர் அச்சுப்பொறி குடும்பத் தைச் சேர்ந்தது. 1984இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது 300. டி. பி. ஐ. வரை அச்சிடும். 800 டி. பி. ஐ. வரை வேறொரு சாதனத்தினால் சக்தி கூட்டலாம். III வரிசையில் துல்லியம் அதிக மாகும். இதன் அச்சு கட்டளை மொழி பி. சி. எல். பிட்மேப் பிலான அச்செழுத்துகளை ஏற்றுக் கொள்கின்றன. அளவு கூடக் கூட அச்செழுத்துகள் சேர்க்கப்படுகின்றன. சிலவற்றை கார்ட்ரிஜ் மூலம் அமைக்கலாம். வரிசை II -ஐ பிசிஎல் 5-ன் மூலம் மேம் படுத்தலாம். ஒரு லேசர் கதிரைப் பயன்படுத்தி சுழலும் உருளையில் உருவங்களைப் பதிக்கும் அழுத்தம் தராத அச்சுப் பொறி. லேசர் தோன்றும் பகுதிகளில் மை துளை உருளை எடுத்துக் கொள்கிறது. உருளையின் மேல் உள்ள இப்பகுதிகள் அழுத்தப்பட்டு காகிதத்தில் கலந்து எழுத்துகள் உருவாகின்றன. laser storage : லேசர் சேமிப்பகம்; லேசர் தேக்ககம் : உலோக மேற்பரப்பின் மேல் லேசர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குறியீடு அமைக்கும் துணை சேமிப்பகச் சாதனம். ஆப்பிள் நிறுவனத்தின் லேசர் அச்சுப் பொறி. மோட்டோ ரோலா 68020 சில்லினால் இயக்கப்பட்டு 2 மீமிகு எண்மிகளுடன் வருவது. . last in first out : கடைபுகு முதல் விடு : ஒர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழி முறை. ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள் களில் (சாப்பாட்டுத் தட்டுகள்) கடைசியாக பொருளைத்தான்முதலில் எடுப்போம். ஒரு சாரையில் (queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் (firstin firstout) மாறானது. last modified : இறுதியாகத் திருத்தப்பட்டது. LAT : லேட் : Local Area Transport என்பதன் குறும்பெயர். டெக் நெட் சூழ்நிலையில் முகப்பு போக்குவரத்தினைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கிய தரவு தொடர்பு வரைமுறை. latch : லேட்ச் : புதிய தரவு அளிக்கப்படும்வரை அதன் அளவை உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மின்னணு மின்சுற்று. latch registers : லேட்ச் பதிவகங்கள் : ஒளிக்காட்சி தாங்கி யில் உள்ள குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு எண்மிகள் அளவு தரவுவை வைத்துக் கொள்ளும் ஒரு எண்மி லேட்ச் பதிவகங்கள் ஈ. ஜி. ஏ. வில் நான்கு உள்ளன. தாங்கி (Buffer) யில் இருந்து மையச் செயலகம் படிக்கும்போது, லேட்ச் பதிவ கங்கள் நிரம்புகின்றன. தாங்கியில் மையச் செயலகம் எழுதும் போது லேட்ச் உள்ளடக்கங்கள் அது தொடர்பான நினைவக இருப்பிடத்தில் திணிக்கப்படுகின்றன. latch voltage : லேட்ச் வோல்டேஜ் அளவை நிலையை ஏற்றம் இறக்கம் (flip-flop) மாற்றக் கூடிய உள்ளீடு மின்சக்தி. late binding : தாமத ஒட்டு : ஓடும் போதே வாலாயங்களை (ரொட்டீன்) இணைப்பது. latency : உள்ளுறை சுணக்கம் : தட்டு அல்லது உருளை போன்ற துணை சேமிப்பக சாதனத்தில் நேரடி அணுகு முறையில் ஒரு பதிவை எழுதவும், படிக்கவும் ஆகும் சுழற்சி தாமதம். latent image : தெரியாத உருவம் : மின்சக்தி மூலம் தோன்றும் புலனாகாத உருவம். சான்றாக, நகல் எந்திரத்தில், ஒரு பக்கத் தின் தெரியாத உருவத்தை ஒரு பலகையிலோ அல்லது உருளையிலோ மின்சக்தி வடிவில் உருவாக்கி வைக்கப்படும். latex or Latex : லேட்டெக்ஸ் : லெஸ்லி லேம்போர்ட் (leslie lamport) நிறுவனம் டெக்ஸ் (TeX) தொழில் நுட்பத்தின் அடிப் படையில் அமைத்த ஒர் ஆவண உருவாக்க மென்பொருள். உரைப்பகுதியின் தலைப்பு, உள்ளடக்கம் போன்று உரை உறுப்புகளுக்குரிய மிக எளிய கட்டளைகள் மூலம் ஆவணத் தின் தோற்றத்தைக் காட்டிலும் ஆவண உள்ளடக்கத்தை முன் னிலைப்படுத்த லேட்டெக்ஸ் உதவுகிறது. lattice : லேட்டிஸ் : பூலியன் அல்ஜீப்ரா போன்ற அல்ஜீப்ரா அமைப்பு. launch : துவக்கு : ஒரு நிரலாக்கத் தொடரை ஏற்றி ஒடச் செய்வது. launcher : ஏவி, தொடக்கி : மேக்சஎஸ் இயக்க முறைமையில், அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும், நிரல்களையும், பயனாளர் ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் இயக்க வகை செய்யும் ஏவு நிரல். . la. us : எல். ஏ. யு. எஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக் காவின் லூசியானாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர். layer : அடுக்கு : 1. வரைபட முறை கோப்பில் அளவை முறையிலான தொடர்பில் தரவுகளின் துணைத் தொகுதி. 2. முப்பரிமாண வரிசையில் மூன்றாவது பரிமாணம். layered interface : அடுக்குநிலை இடைமுகம் : கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக்கூடிய நிரல்கூறுகள். முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். பயன்பாட்டையும் அது செயல்படும் வன்பொருளையும் நேரடித் தொடர்பின்றி பிரிப்பதே அடுக்குநிலை இடைமுகத்தின் நோக்கம். முடிவில் இதுபோன்ற இடைமுகம், ஒரு நிரலை வெவ்வேறு வகைக் கணினிகளில் இயங்கச் செய்வது சாத்தியமாகும். layering : அடுக்கமைத்தல்; அடுக்கு ஒரு தனி ஒவியத்திற்குள் வரைபடமுறை தரவுகளின் துணைக் குழுக்களைத் தொடர்பு படுத்தும் அளவைமுறைக் கோட்பாடு. மிகச் சிக்கலான கோப்பின் அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதன் மூலம் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, கணினியில் வேலை செய்யும் பகுதிகளை மட்டுமே பார்க்க இது அனுமதிக்கிறது. layout : வெளிப்புற அமைப்பு : இட அமைவு : ஒட்டு மொத்த வடிவமைப்பு அல்லது திட்டம் கணினி அமைப்பு, ஒடு படம், திட்ட வரைபடங்கள், அச்சுப் பொறிக்கான வடிவமைப்பு, அட்டைபத்திகளின் வெளி யீட்டு வடிவமைப்பு, ஒரு ஆவணம் அல்லது புத்தகத்தின் வெளி அமைப்பு போன்றது. layout forms and screens : வடிவமைப்புப் படிவங்களும், திரைகளும் : படிவங்கள் மற்றும் உள் ளீடு/வெளியீடு ஊடக உள்ளடக்கம் மற்றும் முறைகளை உருவாக்குவதற்கான கருவிகள். காட்சித் திரைகள் மற்றும் அறிக்கைகள் இவற்றுக்கு சான்று. layout setting : பக்கம் அளத்தல் : ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைப்பதற்கான மதிப்புகளை அளித்தல். ஒரங்கள், பத்தி அளவு, மேற்பகுதி, கீழ்ப்பகுதி, தலைப்புகள், பட்டியல்கள் ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகள். layout sheet : வெளியமைப்புத் தாள்; அமைவுத்தாள் : நிரலாக்கத் தொடர் திட்டமிடலுக்காக காட்சித்திரையில் உள்ளதைக் காட்ட வடிவமைக்கப்பட்ட காகிதத் தொகுதி. வரைபட முறை எக்ஸ்-ஒய் ஒருங் கிணைப்புகள் மூலம் அல்லது வரிசைகள், பத்தி கள் முறையில் சொற்கள் வரைபடங்களைக் காட்டுதல்.", "needs_definition": false, "gloss_en": "language statement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 830"}]}}