{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2vphuceb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2vphuceb/", "kind": "article", "headword": "அக்காரினா", "romanization": "akkāriṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.748098+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை.", "body_ta": "(Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை. உண்ணி, மரவுண்ணி முதலிய வகைகளிடங்கியது. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் மற்றும் இவற்றில் மனிதனுக்குச் சொரி சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் சேர்ந்திருக்கின்றன. பார்க்க: உண்ணி"}}