{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2jux7sh6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2jux7sh6/", "kind": "word", "headword": "முறிவிலா இடவெளி", "romanization": "muṟivilā iṭaveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.505713+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிரியாமல் ஒரே வரியில் இருக்கச் செய்யும். திரு. அறிவரசு என்ற சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது இடமில்லாமையால் திரு. என்பது முந்தைய வரியிலும் அறிவரசு அடுத்த வரியிலும் இடம் பெறும். திரு. அறிவரசு என்ற சொற்கள் இணைபிரியாமல் ஒரே வரியில் நிற்கவேண்டுமெனில் இரு சொற் களுக்குமிடையே முறிவிலா இடவெளியை இடம்பெறச் செய்ய வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "nonbreaking space", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}