{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2j3y7cpr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2j3y7cpr/", "kind": "word", "headword": "மரபுவழி முறைமை", "romanization": "marapuvaḻi muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.519565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும்.புதிய பதிப்புகளை நிறுவும்போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.(எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை,புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செலவும் நேரமும் அதிகம் எடுத்துக்கொள்ளும் புதிய வடிவமாற்றம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.", "needs_definition": false, "gloss_en": "legacy system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 266"}]}}