{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2d5qvkmy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2d5qvkmy/", "kind": "word", "headword": "முனைப்பிலா அணி காட்சித் திரை", "romanization": "muṉaippilā aṇi kāṭcit tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.436396+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகின்ற ஏராளமான திரவப்படிகக் கலங்களை (Cells) கொண்டது. ஒரு மின்மப்பெருக்கி ஒரு முழு நெடுக்கை (Column) அல்லது கிடக்கை (Row) யின் படப்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முனைப்பிலா அணித்திரைகள் பெரும்பாலும் மடிக்கணினி கையேட்டுக் கணினிகளில் பயன் படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மிகவும் தட்டையாக இருக்கும். ஒற்றைநிற திரைக்காட்சிக்கு இவை தெளிவாக இருக்கும். ஆனால் வண்ணத் திரைக்காட்சி எனில் தெளிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி திரையில் நேரெதிர் நோக்கினால்தான் தெளிவாகத் தெரியும். பிற கோணங்களில் பார்த்தால் தெளிவாக இருக்காது. முனைப்பு அணி (Active Matrix) திரைக்காட்சி களில் இக்குறைபாடுகள் கிடையாது. எனினும் முனைப்பிலா அணிக் காட்சித் திரை விலை குறைவானது.", "needs_definition": false, "gloss_en": "passive-matrix display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1088"}]}}